Ticker

6/recent/ticker-posts

Who create a JavaScript? | Features of JavaScript | Tamil | Mr. Tech Code

javascript features in tamil
JavaScript Features

பெரும்பாலான Developer-களால் பயன்படுத்தக்கூடிய JavaScript Programming Language உடைய மிக முக்கிய சிறப்புகளையும், JavaScript-ஐ உருவாக்கி மக்களுக்கு வழங்கிய Programmer-ஐயும் பற்றியும், இந்த பதிவின் மூலமாக தெரிந்துக்கொள்வோம்.

முந்தைய பதிவின் மூலமாக ஓரளவு JavaScript பற்றிய தகவல்களை தெரிந்துக்கொண்டு இருப்பீர்கள். இந்த பதிவின் மூலமாக, மேலும் சிலவற்றை தெரிந்துக்கொள்ளலாம்.

Table of Contents

  • Who is Created JavaScript?
  • Features of JavaScript

Who is Created JavaScript?

JavaScript-ஐ 1995 ஆம் ஆண்டு, Brenden Eich என்பவரால் உருவாக்கப்பட்டது. இது முதலில் Netscape Web Browser-க்காக உருவாக்கப்பட்டு இருந்தாலும், இதன் சிறப்புகளால் வெகுவாக வளர்ந்தது.

JavaScript உடைய முதல் பெயர் LiveScript ஆகும். பின்னர், Netscape Java மீது இருந்த ஆர்வத்தால், இதற்கு JavaScript என்று பெயர்மாற்றம் செய்தது. ஆனால், இதனுடைய உண்மையான Official பெயரானது ECMA Script ஆகும்.

இந்த ECMA என்பதற்கு European Computer Manufacturers Association என்று பொருள். இது ஒரு International Organisation ஆகும்.

Brendan Eich
Brendan Eich 

Features of JavaScript

பயனருடைய தகவல்களை Server-ஐ பயன்படுத்தாமல், JavaScript மூலமாக Validate செய்ய இயலும். இதனால் Server உடைய பணியானது வெகுவாக குறைகின்றது. இதனால், Server உடைய வேகமானது அதிகரிக்க செய்கிறது.

JavaScript ஆனது பெரும்பாலான தகவல்களை Client Side, அதாவது Front End-இல் validate செய்து, server-க்கு அனுப்புகிறது. இதனால் User Interaction ஆனது வெகுவிரைவாக பயனருக்கு Response ஆக கிடைக்கின்றது.

JavaScript கொண்டு இயங்கும் வலைத்தளங்கள் அனைத்தும் பல மடங்கு வேகமாக இயங்குகின்றது.

ஒரு வலைத்தளத்திற்கு JavaScript தான் உயிரோட்டத்தை வழங்குகின்றது. இதனால், வலைத்தளம் Responsive-ஆகவும், பயனரை கவரும் வண்ணமாகவும் செயல்படுகின்றது.

அதுமட்டுமல்லாமல், வலைத்தளம் மற்றுமின்றி JavaScript பயன்படுத்தி, உங்களுடைய கணினி மற்றும் Web Browser சார்ந்த தகவல்களையும் எளிதாக பெற முடியும். 

JavaScript
JavaScript

இதன் மூலமாக, உங்களது கணினியில் தற்காலிக Memory ஆன Cookies-களையும் உருவாக்க இயலும்.

வலைத்தளத்தில் பயன்படுத்தப்படும் Form-களையும், அதனுடைய தகவல்களையும் எளிதாக Validate செய்யலாம். இதனால், தவறான தகவல்கள் Server-இல் சேமிக்கப்படுவதை தவிர்க்க செய்யலாம்.

JavaScript பயன்படுத்தி உங்களுடைய நேரம் மற்றும் காலத்தை எளிதாக கையாளலாம். 

JavaScript, Web Development-இல் தொடக்கி Mobile Application என அனைத்தையும் உருவாக்கும் தன்மைக்கொண்டது.

Conclusion

JavaScript உடைய மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புகள் பலவற்றையும், அதனுடைய மிகசிறந்த பயன்களையும் எளிதாக கையாள கற்றுக்கொள்ளுங்கள்.

Reactions

Post a Comment

0 Comments