Ticker

6/recent/ticker-posts

React Hooks | useState | Tamil | Mr. Tech Code

React useState() Hook

வணக்கம்!

React Developer -களால் பெரும்பாலும் விரும்பப்படும் Component என்றால், அது Functional Components தான். காரணம், இந்த Functional Component உள்ள Hooks சிறப்புகளாகும்.

இந்த Hooks மூலமாக, மிக React Class Components -இல் உள்ள பல்வேறு  கடினமான Functionalities-ஐ மிக எளிமையான முறையில் கையாள இயலும்.

React Hooks -ஐப் பொறுத்தவரையில் பல்வேறு Hooks -கள் உள்ளன. அதில் மிக முக்கியமான useState Hooks -களைப் பற்றி, இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

React useState Hook

React useState Hook ஆனது, ஒரு தகவலை சேகரித்து வைக்கவும், அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும் பயன்படுகின்ற variable ஆகும். சாதாரணமான variable -களைப்போல் இல்லாமல், பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது.

How to use React State Hook?

React State Hook -ஐ பயன்படுத்த முதலில் state -க்கான Library-ஐ பயன்படுத்த விரும்புகின்ற Component -இல் Import செய்துக்கொள்ள வேண்டும்.

React State Hook
React State Hook

 பிறகு, React State Hook -ஐ Initialize செய்துக்கொள்ள வேண்டும். அதாவது, எந்த value-ஐ store செய்ய பயன்படுத்துகின்றோமோ, அதற்கு தொடர்புடைய name-ஐ கொடுத்து, state உடைய Syntax -இல் கட்டமைக்க வேண்டும்.

State Syntax
State Syntax

மேற்கண்ட புகைப்படம் ஆனது State உடைய Syntax ஆகும். கீழ்கண்ட புகைப்படத்தில் உள்ள userDetails என்பது State உடைய பெயராகும். அதனைத்தொடர்ந்துள்ள setUserDetails என்பது userDetails state உடைய Value -ஐ மாற்றியமைக்க பயன்படுத்தப்படும் Function ஆகும்.

React State Hook
React Hooks

userDetails அடுத்ததாக உள்ள useState() என்பது, State உடைய Library ஆகும். அதனுள்ளே கொடுக்கப்பட்டுள்ள தகவலானது userDetails உடைய initial value ஆகும். 

குறிப்பு: நாம் மேற்கண்ட State -இல் Object ஆக value -ஐ கொடுத்துள்ளோம். ஆகையால், அந்த State ஆனது Object -இல் கருதப்படும்.

மேற்கண்ட State -ஐ Html (JSX) -இல் கீழ்கண்டவாறு பயன்படுத்தலாம்.

State Value used on JSX Element
State Value used on JSX Element

இந்த State உடைய Values -ஐ புதுப்பிக்க அல்லது மாற்றியமைக்க useState -ஐ கீழ்கண்டவாறு பயன்படுத்தலாம். கீழ்கண்ட புகைப்படத்தின் வாயிலாக, userDetails State உள்ள Object Value ஆனது மாற்றியமைக்கப்படுகிறது.

state update function
State update function

மேற்கண்ட onChangeState function மூலமாக, setUserDetails function இயக்கப்பட்டு, அதன் மூலமாக userDetails value ஆனது update செய்யப்படுகிறது. இந்த onChangeState function -ஐ தேவையான இடங்களில் call செய்வதன் மூலமாக இயக்கலாம்.

Function declaration on button
Function declaration on button

ஒரு Button component -இல் உள்ள onClick attribute மூலமாக, onChangeState function ஆனது இயக்கப்படுகிறது. இந்த button click செய்வதன் மூலமாக, userDetails value மாற்றியமைக்கப்படும்.

Functional Component State Initialization
Functional Component State Initialization

மேற்கண்ட புகைப்படத்தில், React Functional Component -இல், ஒரு useState() Hook எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். 

குறிப்பு: மேற்கண்ட புகைப்படத்தில் React.FC என்பது Typescript -இல் Functional component என்பதை குறிக்க பயன்படுத்தப்படும் அம்சமாகும். அடுத்தடுத்த பதிவுகளின் மூலமாக, React JavaScript மற்றும் Typescript பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

Browser Result Initial State

Initial State Result
Initial State Result

மேற்கண்ட புகைப்படமானது, Component -ஐ Load செய்ததும் கிடைக்கப்பெறும் value ஆகும். userDetails State -இல் Inital Value கொடுக்கப்பட்டதால் நேரடியாக Web Browser கிடைக்கப்பெறும் value ஆகும்.

Browser ResultAfter Button onClick

updated state result
Updated State Result

மேற்கண்ட புகைப்படமானது, Button மூலமாக, onChangeState function இயக்கியதால் State உடைய value ஆனது Update seithu பிறகு கிடைக்கப்பெறும் value ஆகும்.

How to Access State using setState()?

பொதுவாக, State -ஐ மட்டுமின்றி setState மூலமாகவும், state உடைய value -ஐ Access செய்ய இயலும். இது பெரும்பாலும், useEffect -இல் State update ஆவதால் ஏற்படும் Re-render issue தவிர்க்க பயன்படுத்தப்படும்.

useState() Hook Single Value Update
useState() Hook Single Value Update

மேற்கண்ட புகைப்படத்தில் setUserDetails -இல் கொடுக்கப்பட்டுள்ள preValue என்பது, userDetails state -இல் தற்பொழுது சேமிக்கப்பட்டு இருக்கும் value ஆகும். மேற்கண்ட Function -இல் State உடைய value -இல் name -ஐ தவிர்த்து, password மட்டும் update செய்யப்படுகின்றது.

Advantages of useState() Hook

useState() Hook ஆனது பயன்படுத்துவதற்கு மிக எளிதானது. Class Components போன்று அல்லாமல், மிக எளிதாக Initialize செய்து பயன்படுத்தலாம். 

ஒன்றுக்கும் மேற்பட்ட useState() -களை பயன்படுத்தலாம். இதனால் Performance Optimization செய்யப்படும்.

Advantages of useState() Hook

useState() Hook ஆனது Array அல்லது மிகப்பெரிய Object Value -களை கையாள எளிதாக இருந்தாலும், தொடக்கத்தில் கற்றுக்கொள்ள சற்று சிரமாக தெரியும்.

Conclusion

மேற்கண்ட பதிவின் மூலமாக, React உடைய மிக முக்கியமான Hooks -களில் ஒன்றான useState() -ஐப் பற்றி தெரிந்துக்கொண்டோம். அடுத்த பதிவின் மூலமாக, useEffect() பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

Reactions

Post a Comment

0 Comments